முஸ்லிம் தந்தை ஒருவரை வீதியில் கண்டு உதவி புரிந்த பெரும்பான்மையினஇளைஞன் ஒருவரின் நெகிழ்ச்சியான செயல் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
குறித்த இளைஞன், அவரது காரில் பயணித்துக்கொண்டிருந்த வேளை, அந்த வழியே காது துப்பரவாக்கும் கருவியை விற்பதற்காக முஸ்லிம் தந்தை ஒருவர் வந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அவருடன் கலந்துரையாடிய பெரும்பான்மையின இளைஞன் அவரது குடும்பம் தொடர்பில் கேட்டறிந்தார்.
தனது மகன் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும் தனது மனைவி நீரிழிவு நோய் மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர் என்றும் குறித்த தந்தை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அவரிடம் இருந்து 250 ரூபா பெறுமதியான காது துப்பரவாக்கும் கருவி ஒன்றை வாங்கிய இளைஞன் அவருக்கு 6,000 ரூபாவை வெகுமதியாக அளித்துள்ளார்.