கொழும்பு – அத்துருகிரிய, கல்வருஷாவ வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று (27) அதிகாலை சிலர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புலம்பெயர்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘முதுவா’ என அழைக்கப்படும், தனுக அமரசிங்கவின் வீட்டின் மீதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி வீட்டின் மீது சுமார் 7 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், இந்த தாக்குதலில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரியவருகின்றது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.