கொழும்பில் நல்லாட்சி கோரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜிஜிவை Good Governance Yaya மீது நேற்று (12.11.2023) மாலை 6.00 மணியளவில் இனந்தெரியாத கும்பலொன்று தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
223 நாட்களாக நாங்கள் திம்பிரிகசாயவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் நேற்று (12.11.2023) 224 வது நாள் வாகனங்களில் தடிகள் பொல்லுகள் போன்றவற்றுடன் வந்திறங்கியவர்கள் தாக்குதலை மேற்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்துவிட்டு சுவரொட்டிகளை கிழித்தனர் என ஜிஜிவையின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான சமிந்த டயஸ் தெரிவித்துள்ளார்.