பாணந்துறை பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது சம்பவம் இன்று (28-01-2022) இடம்பெற்றுள்ளது.
தரம் ஒன்றிற்கு பிள்ளை ஒன்றை அனுமதிப்பதற்காக 1.5 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற குறித்த பாடசாலையின் அதிபரே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, முதலில் 2 இலட்ச ரூபாவை அதிபர் கோரியதாகவும், பின்னர் அந்தத் தொகையை 150,000 ரூபாவாகக் குறைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதிபர் பணத்தை பெற்றுக் கொண்டிருக்கும் போதே தலைமறைவாக இருந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அதிபரை கைது செய்துள்ளனர்.
குறித்த தகவலை இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நுவான் அசங்க தெரிவித்துள்ளார்.