கைத்தொலைபேசி தொடர்பில் ஏற்பட்ட தகராறில் நுரைச்சோலை தல்வ பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நான்கு பேருக்கு வலைவீச்சு
இந்த கொலைச்சம்பவம் நேற்று (30) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் தல்வா பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய திருமணமான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.