உணவின் சுவையை அதிகரிப்பதற்கு மட்டும் அன்றி உடலுக்கு பல நன்மைகளைக் கொடுக்கும் மசாலாப் பொருட்களாக பட்டை, கிராம்பு, இலவங்கப்பட்டை, கொத்தமல்லி இதில் அடங்கும்.
காணப்படும் சத்துக்கள்
கொத்தமல்லியை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. நீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும்போது பல பிரச்சனைகளுக்கு மருந்தாகிறது.
கொத்தமல்லியில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-கே, வைட்டமின்-சி, வைட்டமின்-ஈ அதிகளவில் உள்ளன. கூடுதலாக இரும்பு, கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துகளும் உள்ளன.
கொத்தமல்லி நீரை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்
தோல் பிரச்சனைகள்
கொத்தமல்லி தண்ணீர் சருமத்திற்கு மிகவும் பயனுள்ளது. இதில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே இதனை உட்கொள்வது சருமம் தொடர்பான பல பிரச்சனைகளை நீக்குகிறது. மேலும் சருமத்தை ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் மாற்றுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
கொத்தமல்லி தண்ணீரில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன. எனவே அதன் நுகர்வு நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
இது எந்த வகையான வைரஸ் தொற்றையும் தவிர்க்க உதவும்.
எடை இழப்பு
எடை இழப்புக்கு கொத்தமல்லி தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நீரில் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும் பல கூறுகள் உள்ளன. இதன் விளைவாக உடலில் கொழுப்பு குறையத் தொடங்குகிறது.
வயிற்றுக்கு நன்மை
கொத்தமல்லி தண்ணீர் வயிற்றுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஏனெனில் இதில் நார்ச்சத்து உள்ளது.
எனவே தினமும் காலையில் வெறும் வயிற்றில் கொத்தமல்லி தண்ணீரை உட்கொள்வது செரிமானத்தை பலப்படுத்துகிறது மலச்சிக்கல் நீங்கும்.
இதர நன்மைகள்
கொலஸ்ட்ரால் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் மாதவிடாய் பிரச்சனை இருக்கும் பெண்களும் காலையில் கொத்தமல்லி நீரை பருகலாம்.
அவர்களுக்கு இந்தப் பிரச்சசனையில் இருந்து விடுபடு வழி கிடைக்கும்.கொத்தமல்லி நீர் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.