பிரமிட் திட்டத்தில் ஈடுபடுவதாக கூறப்படும் நபருக்கு சொந்தமான சொகுசு காரொன்று, சிலரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக ஹுங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹுங்கம பிரதேசத்தின் ரன்ன, ஹெரோதர மாவத்தையில் உள்ள அவரது வீட்டின் முன்பாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பலரும் பிரமிட் திட்டத்தில் பணம் வைப்புச் செய்துள்ளதாகவும், இருப்பினும் அதற்கான கொடுப்பனவோ பணமோ குறித்த நபரால் மீள வழங்கப்படவில்லை என கூறப்படுகின்றது.
இதன் காரணமாக ஆத்திரமடைந்தவர்கள் காருக்கு தீ வைத்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஹுங்கம பொலிஸ் நிலையத்தில் காரின் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் தொடர்பில் தங்காலை ஹுங்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.