மஹியங்கனை பிரதேச சபையின் தலைவர் கே.பி. குணவர்தன நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வணக்கத்துக்குரிய வட்டரெக்க விஜித தேரரை தாக்கிய சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பிரதேச சபையின் தலைவர் இன்று (10) கைது செய்யப்பட்டு மஹியங்கனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
(செய்திப் பின்னணி – 04:17 pm)
வணக்கத்திற்குரிய வட்டரெக்க விஜித தேரரை தாக்கிய சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பிரதேச சபையின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வட்டரெக்க விஜித தேரர் செய்த முறைப்பாட்டின் பேரில் தலைவர் கைது செய்யப்பட்டதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 27 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றக் கூட்டத்தின் போது இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 04:17 pm இதன்படி, கைது செய்யப்பட்ட மஹியங்கனை பிரதேச சபையின் தலைவர் கே.பி. குணவர்தன நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்