இந்தியா கிரிகெட் வரலாற்றில் சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக விராட் கோலி இருந்துவருகின்றார். எனினும் விராட் கோலி கடந்த 2 ஆண்டுகளாக ஃபார்மில் இல்லாமல் திணறிவரும் நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனிலும் ஸ்கோர் செய்யமுடியாமல் திணறி வருகிறார்.
இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 128 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார் கோலி. இந்த நிலையில் விராட் கோலியின் வாழ்க்கைக்கு கெட்ட நேரத்தை கொண்டு வந்துவிட்டார் அனுஷ்கா சர்மா” என பாலிவுட் நடிகர் கேஆர்கே சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்துள்ளார் .
அதோடு நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்த பிறகுதான் கோலியின் பேட்டிங் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாலிவுட் நடிகர் கேஆர்கே விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,
”விராட் கோலியின் வாழ்க்கைக்கு கெட்ட நேரத்தை கொண்டு வந்துவிட்டார் அனுஷ்கா சர்மா. இதனால் அனுஷ்காவை விவாகரத்து செய்தால் மட்டுமே கோலியால் பழைய மாதிரி விளையாட முடியும். அவரை திருமணம் செய்த பிறகுதான் விராட் கோலியின் பேட்டிங் பாதிக்கப்பட்டுள்ளது”என பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
அவரின் இந்த ட்வீட்டுக்கு தற்போது பல்வேறு தரப்பினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். நெட்டிசன் ஒருவர் குறிப்பிடுகையில்,
”ஒரு வீரர் ஃபார்மில் இல்லாததும், ஃபார்முக்கு திரும்புவதும் சகஜமான ஒன்றுதான். எல்லா வீரர்களும் இந்த சூழலை எதிர்கொள்வார்கள். இவ்வாறிருக்கையில் விராட் கோலியின் ஆட்டத்திறனை அவரது தனிப்பட்ட வாழ்க்கையுடன் முடிச்சு போடுவதா?” எனப் பதிவிட்டுள்ளார். இதேபோல் பலரும் நடிகர் கே.ஆர்.கே.விற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
தொடர்ந்து கேஆர்கே பதிவுக்கு பலத்த கண்டனங்கள் எழுந்ததை தொடர்ந்து நடிகர் கேஆர்கே அந்த ட்விட்டை நீக்கி விட்டார்.
அதேவேளை பாலிவுட் நடிகர் கேஆர்கே அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவிப்பதும், நெட்டிசன்கள் அவருக்கு பதிலடி கொடுப்பதும் வழக்கமான ஒன்றாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது