கூட்டமைப்பிற்குள் புதிதாக உள்வாங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் தனிப்பட்ட ரீதியில் ஒருகட்சியினால் எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் எந்த விதத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இருப்பிற்கு பிரச்சனையை ஏற்படுத்தாது என ரெலோ அமைப்பின் தேசிய அமைப்பாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (08-01-2023) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள்ள இருக்கின்ற ஒரு கட்சியினர் சில தீர்மானங்களை எடுத்துள்ளதாகவும் அவ்வாறான தீர்மானங்களிலும் மாறுபட்ட நிலைப்பாடு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.