விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கடித்துவிடக் கூடாது என்பதற்காக சிலை போல் நடித்த சிறுவனுக்கு குரங்கு முத்தம் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கடித்துவிடக் கூடாது என்பதற்காக சிலை போல் நடித்த சிறுவனுக்கு குரங்கு முத்தம் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள எஸ்.மறைக்குளம் கிராமத்தில் ஒரு குரங்கு ஒன்று ஊரில் பலரையும் அச்சுறுத்தி வருகின்றது. இந்தநிலையில் அந்த குரங்கானது தெருவில் வருவோர், போவோரை துரத்தி கடித்து வருவதாகவும், தற்போது வரை 15-க்கும் மேற்பட்ட நாய்களை கடித்து குதறி உள்ளதாகவும் அப்பகுதியினர் கூறுகின்றனர்.
சிலை போல் நடித்த சிறுவனுக்கு முத்தம் கொடுத்த குரங்கு
இதனால் அப்பகுதியினர் குரங்கை பார்த்தாலே அலறியடித்து ஓடுகின்றனர். இந்தநிலையில் 10 வயது சிறுவன் ஒருவன் பள்ளியின் சுற்றுச்சுவரில் ஏறி விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது திடீரென அந்த குரங்கு அவன் அருகே வந்தது. அப்போது குரங்கு கடித்து விட கூடாது என்பதற்காக சமயோஜிதமாக அந்த சிறுவன் சிலை போல நடித்து அசைவற்று அமர்ந்திருந்தான்.
இருப்பினும் குரங்கு அந்த சிறுவனை விடுவதாக இல்லை. அவன் அருகே சென்று சேட்டைகளை செய்தது. தொடர்ந்து, 7 நிமிடங்கள் வரை அந்த சிறுவனை அசைத்தும், முத்தம் கொடுத்தும் பல விதங்களில் தொல்லை கொடுத்தது. ஆனால் அவனோ குரங்கின் சேட்டைக்கு பிடிகொடுக்காமல் சிலை போல் அமர்ந்திருந்தான். சிறிது நேரம் கழித்து குரங்கு தானாக சென்று விட்டது. பின்னர் அந்த சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. சிறுவனின் புத்திசாலித்தனத்துக்கும் பாராட்டு குவிந்து வருகிறது.