தமிழகத்தின் கோவை, பொள்ளாச்சி, ஈரோடு ஆகிய இடங்களில் பா.ஜ.க., இந்து முன்னணி பிரமுகர்களின் கடைகள், வாகனங்கள் மீது நேற்று முன்தினம் இரவு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதுடன் பா.ஜனதா அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் பா.ஜனதா அலுவலகங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
பொலிசார் குவிப்பு
இதையடுத்து மாவட்டம் முழுவதும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாத வகையில் 3,500 பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
சம்பவம் பேசிய மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம். 92 இஸ்லாமிய ஜமாத் அமைப்புகளை சந்தித்து ஒத்துழைக்க கோரிக்கை விடுத்துள்ளதுடன், இந்து அமைப்புகளை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.
அதேசமயம் சமூக வலைத்தளங்களில் மக்கள் பதற்றம் அடையும் வகையில் செய்திகள் பரப்பப்படுகிறதாக தெரிவித்த அவர் ஒரிரு நாட்களில் குற்றவாளிகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்த அவர், சமூகவலைத்தளங்களில் மோதல் உண்டாகும் வகையில் கருத்து பரப்பினால் குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் எனவும் எச்சரித்துள்ளார்.