வாட்ஸ்அப் செயலியின் ஊடாக குடும்ப பெண்ணிற்கு ஆணுறுப்பை காட்டி பாலியல் தொலை மேற்கொண்ட சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை ஒகஸ்ட் 21 ஆம்திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் அம்பாறை – சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி இடம்பெற்றுள்ளது.
குறித்த வழக்கு கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் நேற்று முன் தினம் (08-08-2023) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் பிரதான சந்தேக நபரான சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.