மக்களின் கோரிக்கையை ஏற்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கௌரவமான முறையில் பதவி விலக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், ராஜபக்ச குடும்பமும் அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். இது குறித்து அவர் கூறுகையில்
” நான் குடும்ப அரசியலுக்கு எதிரானவள், குடும்ப உறுப்பினர்கள் அரசியலில் இல்லாத சூழ்நிலையில்தான் நான் தேர்தலில் போட்டியிட்டேன். எனது தாயார் (ஶ்ரீமாவும்) அரசியலில் இருந்து ஒதுங்குவேன் என்ற உறுதிமொழியை எனக்கு வழங்கியிருந்தார்.
அதேசமயம் குடும்ப அரசியலுக்கு எதிர்ப்பு என்பதால்தான் மகனைகூட அரசியலில் இறக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே கோட்டாபயமக்களின் கோரிக்கையை ஏற்று , அவர் கௌரவமாக பதவி விலக வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவித்தார்.