கிளிநொச்சியில் உள்ள பகுதியொன்றில் தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க ஏறிய நபரொருவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் (06-08-2023) முழங்காவில் கிருஷ்ணன் கோவில் வீதியில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த நபர் தேங்காய் பறிக்கும் தொழிலை மேற்கொண்டு வரும் ஒரு கூலியான ஆவார்.
குறித்த நபர் நேற்று முழங்காவில் பகுதியில் உள்ள ஒருவரின் காணியில் தேங்காய் பறிக்க மரத்தில் ஏறிய சமயம் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
அன்புபுரம் முழங்காவில் பகுதியைச் சேர்ந்த கருணாகரன் ரூபன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முழங்காவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.