கிளிநொச்சில், பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வெடி பொருள் தவறுதலாக வெடித்ததில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்றையதினம் (13-10-2024) அரசாங்கேணி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பகுதியில் தமக்குச் சொந்தமான வயல் காணியில் துப்புரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது மண்ணுள் புதையுண்டு இருந்த நிலையில் இருந்த வெடி பொருள் தவறுதலாக வெடித்துள்ளது.