கிளிநொச்சி மாவட்டத்தின் பிரமந்தனாறு சந்திப்பகுதியில் இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு கத்திகுத்தில் முடிந்துள்ளது.
முரண்பாடு காரணமாக ஏற்பட்ட கைகலப்பில் கத்திக்குத்திற்கு இலக்கான இளைஞன் தர்மபுரம் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று 04.04.2024 மாலை இடம்பெற்றுள்ளது.
மயில்வாகனபுரம் பகுதியினை சேர்ந்த இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த உயிரிழப்பு தொடர்பில் தர்மபுரம் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள், உயிரிழந்தவரின் சடலம் தர்மபுரம் ஆதாரமருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது
பிரோத பரிசோதனைகளின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தர்மபுரம் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்லாறு, பிரமந்தனாறு, போன்ற பகுதிகளில் அடிக்கடி இளைஞர்க குழுக்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.