கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்றையதினம் தருமபுரம் வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் உந்துருளியில் செல்லும்போது ஏ 9 வீதியில் விபத்தில் சிக்கியிருக்கிறார். இதனையடுத்து 119 அவரச நோயாளர் காவு வண்டிச் சேவைக்கு தொடர்பினை ஏற்படுத்திவிட்டு நீண்ட நேரமாக காத்திருக்க நேர்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த நிலையில் சுகாதாரத் திணைக்கள ஊழியர் ஒருவர் தமது திணைக்களத்தின் முன் படுகாயமடைந்தநிலையில், சுகாதார சேவை பணிமனையில் இருந்த நோயாளர் காவுவண்டி உட்பட பலவாகனங்களில் அங்கு நிருத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் ஒன்றை எடுத்து படுகாயமடைந்தவரை வைத்தியசாலையில் அனுமதிக்க எவரும் முயலவில்லை எனவும் பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த பணிமனையின் பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர் ஒருவர் விபத்து நடந்த சிறிதுநேரத்தில் அவ்விடத்தை கடந்து சென்றபோது நின்று விடயத்தை விசாரித்து அறிந்து விட்டு நடவடிக்கை எதுவும் எடுக்காது சென்றுவிட்டதாகவும் கூறப்படுகின்றது.
இறுதியில் கடமை நிமித்தம் அவ்வழியால் சென்ற கிளிநொச்சி சுகாதாரத் திணைக்கள வாகனம் ஒன்றே படுகாயத்திற்குள்ளான தாதிய உத்தியோகத்தரை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.