கிளிநொச்சி பஸ் தரிப்பிடத்தில் நேற்றையதினம் (03-04-2024) அதிகாலை 2.00 மணியளவில் நபரொருவர் குடித்துவிட்டு பொதுமக்களை தாக்கி அட்டகாசம் செய்துள்ளார்.
இதனையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் அதிகாலை 2 மணியளவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி பஸ் தரிப்பிடத்தில் அமைதி நிலையை ஏற்படுத்த உதவுமாறு அவசரக் கோரிக்கை விடுத்தனர்.
அதைத்தொடர்ந்து இரவோடு இரவாக பொலிஸாரை பஸ் தரிப்பிடப்பகுதிக்கு அனுப்பி வைத்து அட்டகாசம் புரிந்த நபரை கைது செய்துமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை, உடனடியாக நடவடிக்கை எடுத்து உதவிய அமைச்சரை நேரடியாக வருமாறு வியாபாரிகள் அழைத்த நிலையில் காலை பஸ் தரிப்பிடத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரடி விஜயத்தை மேற்கொண்டார்.
இச்சம்பவம் தொடர்பில் அவரின் முகநூல் பக்கத்தில் பதிவு வெளியிட்ப்பட்டுள்ளது.