கிளிகளை விற்பனைக்காக காட்சிப்படுத்திய குற்றச்சாட்டில், சந்தேகநபரொருவருக்கு 20,000
ரூபாய் அபராதம் செலுத்துமாறு, பலாங்கொடை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜயருவன்திசாநாயக்க நேற்று முன்தினம் (6) உத்தரவிட்டுள்ளார்.11 கிளிகளை விற்பனை நிலையமொன்றில் காட்சிபடுத்திய பலாங்கொடை- ஹுனுகும்புர
பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு அபராதத்தை செலுத்தியுள்ளார். குறித்த 11 கிளிகளும் ஒரே கூட்டில் அடைக்கப்பட்டிருந்த போதே, வனஜீவராசிகள் திணைக்களஅதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அத்துடன் கைப்பற்றப்பட்ட கிளிகள், நீதிமன்ற உத்தரவுக்கமைய, பலாங்கொடை வனப்பகுதியில் பறக்கவிடப்பட்டுள்ளன.

