கிராம உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்கு அரசால் தீர்வு காணப்படாவிட்டால் எமது தொழில்சார் நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் உரையாற்றுகையில்,
“கிராம உத்தியோகபூர்வ சேவையை ஸ்தாபிக்காமை, தனித்துவமான சம்பளம் கிடைக்காமை, கிராம உத்தியோகத்தர்களுக்குத் தேவையற்ற அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றமை போன்ற பிரச்சினைகள் எழுந்துள்ளன.
கடந்த சில நாட்களாக உத்தியோகபூர்வ விடுமுறை மற்றும் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கைகளைக் கிராம உத்தியோகத்தர்களின் மேற்கொண்டு வருகின்றனர்.
கிராம உத்தியோகத்தர்களின் சேவையானது எட்டு மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை.
நீண்டகாலமாக அவர்களது தொழில்சார் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை.” – என்றார்.