திருகோணமலை, கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் படகுப்பாதை விபத்துக்கு உள்ளானமை தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி , படகுப்பாதையின் உரிமையாளர் மற்றும் அதனை இயக்கிய இருவருமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில், சிறுவர்கள் உட்பட அறுவர் உயிரிழந்ததுடன் 20 பேர் காயமடைந்திருந்தனர்.
நேற்று இடம்பெற்ற இந்த அனர்த்தம் முழு நாட்டையுமே சோகத்தில் ஆழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது