புத்தளத்தில் உள்ள வீடொன்றுக்கு அருகில் கிணற்றிலிருந்து இரண்டரை மாத குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் புத்தளம் – கற்பிட்டி, கந்தகுடாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த குழந்தையின் சடலம் இன்று (02-04-2024) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
கிணற்றிலிருந்து மொஹமட் பாத்திமா என்ற இரண்டரை மாத குழந்தையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.