பசறையில் நேற்று மாலை பெய்த கடும் மழையின் காரணமாக காவல் கடமையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தெய்கிந்தகம பல்லேகமயில் மாணிக்கக் கல் அகழ்விற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரம் ஒன்றில் காவல் கடமைக்கு அமர்த்தப்பட்டிருந்த 68 வயதுடைய நபரே இவ்வாறு மாயமாகியுள்ளார்.
இந்நிலையில் நேற்று பெய்த கடும் மழையின் காரணமாக குறித்த தற்காலிக கூடாரத்துடன் பெய்த மழை வெள்ளத்தில் அடித்துச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த நபரை தேடும் பணிகளில் பொலிஸாரும் பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர். காணம்ல் போனவர் பராக்கிரம மாவத்தை 24/3 B எனும் விலாசத்தை உடைய மொஹமட் மொஹைதின் மொஹமட் மிலான் எனும் 68 வயதுடைய நபர் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.