தனது காதலனுக்கு வேறு உறவு இருப்பதாக சந்தேகமடைந்த யுவதியொருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
புத்தளம், முந்தல் நவதன்குளம் பகுதியில் யுவதி , தண்டவாளத்தில் தலையை வைத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனியார் ஆடை நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த 20 வயதுடைய பியுமி மல்ஷானி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தொடருந்து வரும் நேரம் தண்டவாளத்தை நோக்கி மகள் ஓடியதை கண்ட தாயார் அலறியடித்து ஓடிய போதிலும் யுவதில் தொடருந்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் காதலர்களுக்கு இடையில் ஏற்பட்ட காரசாரமான தொலைபேசி உரையாடலின் பின்னர் மகள் விபரீத முடிவை எடுத்துள்ளதாக தாயார் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்