மன்னார் பகுதியில் வசிக்கும் மாணவி ஒருவர் காணாமல் போயிருப்பதாக அவரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி, மணற்குளம் என்ற முகவரியில் வசிக்கும் மாணவியே இவ்வாறு கானாமல் போயுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பண்டாரவெளி முஸ்லிம் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் 15 வயதான ரிகாஷா என்ற மாணவியே 18-05-2023 காலையில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவி காணாமல் போனது தொடர்பாக நேற்றும், இன்றும் தேடிய பெற்றோர் மாணவி பற்றிய தகவல்கள் கிடைக்காததை தொடர்ந்து சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் (19-05-2023) சிலாவத்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததாக மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, காணாமல் போன மாணவி பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் 074-2614797 எனும் மாணவியின் தந்தையின் தொலைபேசிக்கு தகவல்களை தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.