யாழ்ப்பாணம் – வடமராட்சி உள்ள துன்னாலை பகுதியில் இரண்டு பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் வறுமையில் நிலையில் வாழ்ந்து வரும் வயோதிப தாய் உதவி கோரியுள்ளார்.
யாருடைய உதவிகளுமின்றி பெரும் கஷ்டங்களையும் துயரங்களையும் எதிர் கொண்டு தற்போது வரை வாழ்ந்து வருகின்றார்.
இவ்வாறான நிலையில் தனக்கு உணவுத் தேவைக்கு உதவி செய்யுமாறு வயோதிப தாய் கோரியுள்ளார்.
இந்நிலையில் கருணையுள்ளம் கொண்டவர்கள் குறித்த தாய்க்கு உதவ முன்வர வேண்டுமென முகநூலில் குறித்த பதிவை மைக்கல் என்பவர் பதிவிட்டுள்ளார்.