மிகவும் அழகான சுற்றுலா தலத்திற்கு பெயர்போன் இடங்களில் ஒன்றகவுள்ள ஹவாய் தீவு காட்டுத்தீயினால் சிதைந்துபோயுள்ளது.
ஹவாயில் , காட்டுத்தீ காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளதுடன் 100க்கும் அதிகமானவர்கள் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹவாயில் காட்டுதீயினால் முற்றாக அழிவடைந்துபோன லகையினாவின் மக்கள் தங்கள் பகுதிகளிற்கு திரும்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தங்கள் பகுதிக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.
ஹவாய் மக்கள் தங்கள் வாழ்க்கையில் ஒருபோதும் காணாத பேரழிவுகளை எதிர்நோக்கியுள்ளனர்.
கடந்தவார தீ காரணமாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஹவாயின் லகையினா நகரம் முற்றாக அழிவடைந்துள்ளது. தங்கள் ஆடைகளுடன் அந்த பகுதியிலிருந்து வெளியேறிய மக்கள் தாங்கள் தங்கள் அடையாளத்தை நிரூபிக்கவேண்டிய நிலையேற்படலாம் என கவலை வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை சுனாமிக்கு பின்னர் ஏற்பட்ட மிகப்பெரிய அழிவாக இந்த காட்டுத்தீ அழிவு அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த இயற்கை அனர்த்த்தால் ஹவாய் மக்கள் உடமைகளை இழந்து நிர்கதிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.