களுத்துறை -நாகொட , கலஸ்ஸ பகுதியில் மாபலகமவில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கைப் போக்குவரத்துக்கு சொந்தமான பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் 13 பேர் காயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதே திசையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென திரும்ப முற்பட்டதில் பஸ் வீதியை விட்டு விலகி சுவரில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் சுமார் 60 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முச்சக்கரவண்டியானது அருகில் உள்ள கோவிலுக்கு சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.