நவராத்திரி என்பது கல்வி, செல்வம், வீரம் என்பவற்றினை தரக்கூட்டிய துர்க்கை, இலங்கும், சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவிகளை போற்றி கொண்டாடும் வழிபாடே நவராத்திரி விழாவாகும்.
இந்துக்களால் கொண்டாட்டப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் நவராத்தியும் ஒன்றாகும். அந்தவகையில் இந்த ஆண்டு நவராத்திரி விழா இன்று ( 3) துவங்கி, அக்டோபர் 11ம் திகதி வரை கொண்டாடப்பட உள்ளது.
நவராத்திரியின் முதல் நாளில் அம்பிகையின் எந்த வடிவத்தை நாம் வழிபட வேண்டும், நவராத்திரி வழிபாடு தோன்றிய முறை, கொலு வைக்கும் முறை தோன்றிய வரலாறு, முதல் நாளில் அம்பிகையை எந்த நிறத்தில், என்ன நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு அதற்குரிய முறைகளில் வழிபடுவது சிறப்பு.
நவராத்திரியை கொண்டாடுவதற்கும், கொலு வைப்பதற்கும் புராண கதைகள் உள்ளன.
மகிஷன் என்ற எறுமை ரூபம் கொண்ட அசுரனை வதம் செய்வதற்காக அம்பிகை, ஒன்பது நாட்கள் தவம் இருந்தாள்.
பல்வேறு சக்தி வாய்ந்த வரங்களை பெற்ற அந்த அசுரனை வதம் செய்வதற்காக அம்பிகைக்கு ஒவ்வொரு தெய்வங்களும் ஒவ்வொரு விதமான ஆயுதங்களை அளிக்கிறார்கள்.
கடைசியாக அசுரனுடன் அம்பிகையை போரிட்டு, அவனை வதம் செய்கிறாள். அவள் வெற்றிக் கொண்ட பத்தாவது நாளையே விஜயதசமியாக கொண்டாடுகிறோம்.
அன்றையதினம் குழந்தைகளுக்கு ஏடு தொடக்குதல், புதிய தொலில் ஆரம்பித்தல் போன சுகாரியங்களை தொடங்கும் வழக்கமும் தொன்று தொட்டு இந்துக்களிடம் காணப்படுகின்றது.
விஜதசமி அன்று தொடங்கும் காரியங்கள் மிகவும் நன்மை அளிக்கும் என்பது இந்து மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்