பொங்கல் பண்டிகை என்றாலே பலருக்கும் கரும்பு தான் நினைவுக்கு வரும். பொங்கல் உண்ட பிறகு கரும்பு சாப்பிடுவதும் தனி சுகம் தான்.
வெறும் இனிப்பு பொருளாக மட்டும் இல்லாமல் கரும்பில் பல சத்துக்களும் உள்ளன.
இந்த சத்துக்கள் உடலின் இயக்கத்தை சீராக்குகிறது. பொங்கல் பண்டிகையில் நாம் விரும்பி உண்ணும் கரும்பில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.
அதனால் கிடைக்கும் நன்மைகழும் ஏராளம்.
கரும்பில் உள்ள சத்துக்கள்
புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகள் இதில் அதிகம் காணப்படுகின்றன.
நாம் வீட்டில் பயன்படுத்தும் சர்க்கரையை விட கரும்பில் தான் அதிகமான வைட்டமின்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரும்புச் சத்து, மக்னீசியம் , வைட்டமின் பி1, ரிபோஃப்ளேவின் போன்றவை கரும்பில் இருக்கின்றன.
நோயெதிர்ப்பு சக்தி
நோய்களை எதிர்த்து போராடும் ஆன்டி ஆக்ஸிடன்கள் கரும்பில் காணப்படுகின்றன.
அதுமட்டுமல்லாது இவை மலேரியா, தோல் புற்றுநோய், இதய நோய், சர்க்கரை வியாதி ஆகியவற்றை சிக்கலான நிலைமைக்கு கொண்டு செல்லும் ஆக்ஸினேற்ற அழுத்தத்தில் இருந்து செல்களை காக்கிறது