கனடாவில் காணாமல் போன 16 வயது சிறுமி குறித்த தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.லாங்போர்ட் பகுதியை சேர்ந்த மெக்கன்சி சவுர்சின் என்ற 16 வயது சிறுமி கடந்த 2ஆம் திகதி காணாமல் போனார்.
5 அடி 3 அங்குலம் உயரம் கொண்ட மெக்கன்சி 123 பவுண்ட் எடை கொண்டவர் ஆவார்.அவரின் உடல்நிலை மற்றும் தற்போதைய நிலை குறித்து பொலிசார் கவலை கொண்டுள்ளனர்.
மெக்கன்சி வான்கூவரில் இருந்து அல்பர்டாவின் எட்மண்டன் இடையே பயணத்தில் இருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர்.அவர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் பொலிசாரை தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ள நிலையில் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.