கனடாவின் ஹாமில்ட்டன் நகரில் அமைந்துள்ள ஆளரவமற்ற வீடு ஒன்றில் சந்தேகத்துக்கிடமாக ஏதோ நடப்பதாக பொலிசாருக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது.இன்னொரு பக்கம், ஒரு குழந்தை இறந்துபோனதாக ஒரு செய்தி பரவிக்கொண்டிருந்தது, பின்னர் அது புரளியாக இருக்கலாம் என்ற செய்தியும் வெளியானது. ஆனாலும், விடாமல் இறந்துபோனதாக கூறப்பட்ட குழந்தையை தேடினார்கள் பொலிசார்.அப்போது ஆளரவமற்ற வீடு ஒன்றில் தரை தளத்தில் உள்ள அறை ஒன்றில் ஏதோ புதைக்கப்படிருப்பதற்கான அடையாளங்கள் தெரியவே, தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் அந்த இடத்தைத் தோண்டியபோது, உண்மையாகவே அங்கு ஒரு குழந்தைபுதைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள்பொலிசார். அது, அப்போதுதான் பிறந்த ஒரு குழந்தை என தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வெவ்வேறு இடங்களுக்கு சென்று தற்காலிகமாக தங்கி வேலை செய்யும் Nathan O’Brien (34) மற்றும் அவரது மனைவியான Winnie Ensor (24) என்பவர்கள் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்கள்.அவர்கள்தான் அந்த குழந்தையின் பெற்றோர் என கருதப்படுகிறது.
அந்த வழக்கை முதலில் கொலை வழக்கு என்று குறிப்பிட்டுவந்த பொலிசார், இப்போது அதை கொலை என்று குறிப்பிடுவதை நிறுத்துவிட்டார்கள்.அதற்கான காரணம் தெரியவில்லை… குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பபட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.