அனுராதபுர மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன கனடாவில் பணிபுரிய விசாவிற்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேசமயம் தான் கனடாவில் அரசியல் தஞ்சம் கோரவில்லை என்றும், வேலை விசாவுக்காக காத்திருப்பதாகவும் உத்திக பிரேமரத்ன கூறியுள்ளார்.
அதோடு தான கனடாவில் இருந்த போதே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் தான் அரசியலில் இருந்து எதையும் சம்பாதிக்கவில்லை என்றும், நடிப்பில் சம்பாதித்தது தான் ஏற்கனவே தன்னிடம் உள்ளதாகவும் உத்திக பிரேமரத்ன தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளை அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன பதவி விலகியமையால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு எஸ்.சீ. முத்துகுமாரன நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.