கனடாவில் உள்ள பெண்மணி ஒருவர் தன்னுடைய செல்லபிராணியான பூனை குட்டி உயிரிழந்து ஒராண்டு நினைவாக இலங்கையில் உள்ள தமிழ் பிள்ளைகளுக்கு எதாவது உதவி செய்யவேண்டும் என விரும்பியதற்கு அமைவாக அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரூபா 28000/= பெறுமதியான அப்பியாசக் கொப்பிகள் மாணவர்களுக்கு நேற்று வெள்ளிக்கிழமை (09-06-2023) மாலை 03.00 மணிக்கு வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் திரு .சிவா அண்ணையும் திரு து .அருள்லிங்கம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இந்த தகவலை வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் யாழ்ப்பாணம் த.தே.கட்சியின் இளைஞர் அணித் தலைவரான சபா. குகதாஸ் முகநூல் பதிவிட்டுள்ளார்.

