பொலன்னறுவை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பியோடிய கைதிகளில் 104 பேரை மீண்டும் பொலிஸார் கைதுசெய்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து நேற்று திங்கட்கிழமை (2023.12.11) 140 கைதிகள் இவ்வாறு தப்பியோடிய நிலையில், அவர்களை கைதுசெய்ய சிறப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்த பொலிஸார் அவர்களில் 104 பேரை தற்போது வரை கைதுசெய்துள்ளனர்.