வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் கந்தன் ஆலயத்திலிருந்து சுமார் 38 பவுண் நிறையுடைய தங்க தட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக கொழும்பிலிருந்து விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டு கதிர்காமம் அனுப்பபட்டு தீவிரமான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.
குறித்த தங்கத்தட்டு கடந்த 2019ம் ஆண்டு பக்தர் ஒருவரால் காணிக்கையாக வழங்கப்பட்ட நிலையில், சுமார் 38 பவுண் நிறையுடைய குறித்த தங்க தட்டு 2 வாரங்களுக்கு முன் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குற்றத் தடுப்பு பிரிவின் விசேட பொலிஸ் குழு மேற்படி கொள்ளை சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.