கட்டார் நாட்டில் இடம்பெற்ற வாகன விபத்தில் மட்டக்களப்பு – ஏறாவூரைச் சேர்ந்த 25 வயதுடைய ஸியாவுல் ஹக் எனும் இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
சுமார் ஒன்றரை வருடத்திற்கு முன்னர் கட்டாருக்கு தொழிலுக்காக சென்ற தனது மகன் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக ஸியாவுல் ஹக்கின் தந்தை தெரிவித்தார்.
குறித்த இளை ஞன் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது பஸ் வண்டியில் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக கட்டாரில் இருந்து தமக்கு தகவல் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் குறித்த இளைஞரின் அடக்கம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.