பசறை நகரில் கூட்டமாக வரும் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
காலை வேளைகளில் கூட்டமாக வரும் கட்டாக்காலி நாய்களினால் பாடசாலை மாணவர்களும், பாதசாரிகளும், வாகன சாரதிகளும், மோட்டார் சைக்கிள்கள் ஓட்டுபவர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர் நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே கட்டாக்காலி நாய்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி அவற்றாஈ கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.