இலங்கையில் பாண் தூள் மற்றும் பழைய அரிசிமா என்பனவற்றினை மிளகாய்த்தூளுடன் கலந்து விற்பனை செய்யும் மோசடி கும்பல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
புறக்கோட்டை சுற்றியுள்ள கடைகளில் இந்த மிளகாய் தூள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் சேவை அதிகார சபைக்கு தகவல் கிடைத்துள்ளது.
கொழும்பு – கிரேன்பாஸ் பகுதியில் இந்த மோசடி இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.
இதற்காக புறக்கோட்டை பகுதியில் உள்ள மொத்த விற்பனைநிலையங்களிலிருந்து அகற்றப்பட்ட பாண் தூள் மற்றும் பழைய அரிசி மா என்பன இவற்றிற்கு பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.