222 இலங்கை கடற்படை அதிகாரிகளையும் மற்றும் 3548 ஏனைய சிப்பாய்களையும் அடுத்த தரத்திற்கு பதவி உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையின் 72வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் பரிந்துரையின் பேரில் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படை ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.