கடனட்டை வட்டி வீதங்களை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆசு மாரசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் தவணைக் கடனாக 336 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கப் பெற்றுள்ளதாக கூறியுள்ளார்.
நாட்டின் பணவீக்கம் 0.9 வீதமாக காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு தற்பொழுது செல்லும் பாதையை மாற்றினால் பாரதூரமான பொருளாதார பாதிப்புக்கள் ஏற்படக்கூடும் எனவும் சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளதாக ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.