கடந்த வியாழக்கிழமை 400 கோடி ரூபாயும், வெள்ளிக்கிழமை 200 கோடி ரூபாயும் விவசாயிகள் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். .
நெல் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கும் நடவடிக்கை அடுத்துவரும் இரண்டு வாரங்களில் முழுமையாக நிறைவு செய்யப்படும் என விவசாய அமைச்சர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கைக்கு அமைய ஆசிய அபிவிருத்தி வங்கி விவசாயிகளுக்காக 800 கோடி ரூபாவை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.