குருவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றில் வசித்து வந்த குறித்த நபர் கடத்தப்பட்டு, இரும்பு கம்பியால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வீடொன்றில் வைத்து நபர் ஒருவர் தாக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து சம்பவம் தொடர்பில் நேற்று (21) குருவிட்ட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வீட்டுக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் வைத்து தாக்கப்பட்ட நபரை பொலிஸார் கண்டுபிடித்ததுடன், காயமடைந்த நபரை இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
எனினும் தாக்குதலுக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் பரங்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான நபரே தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
தனிப்பட்ட பகையே கொலைக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்ததுடன், உயிரிழந்தவரின் சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை குருவிட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

