கடுகஸ்தொட – மெனிக்கும்புரவத்த பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தீ விபத்தில் தந்தை, மகள் மற்றும் மருமகன் ஆகியோர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ள நிலையில், தாய் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.