முல்லேரியா, ஹல்வராவ பிரதேசத்தில் வேலை செய்யும் இடத்தில் ஜொதன் மாகர் என்ற ஐந்தரை வயதுச் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் கெவிந்த பெரேரா கடந்த 10ஆம் திகதி உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தலஹேன படலவத்தை பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் பியசிறி என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை குழந்தைக்கான சரியான பாதுகாப்பை வழங்காத குற்றச்சாட்டின் கீழ் குழந்தையின் உறவினர் ஒருவரையும் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (11) கைது செய்தனர்.
கடந்த 8ஆம் திகதி வேலைத்தளத்தில் புல்வெட்டிக் கொண்டிருந்தபோது, தவறுதலாக புல் வெட்டும் இயந்திரத்தின் கத்தி குழந்தையின் வயிற்றை தாக்கி படுகாயமடைந்து உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
எனினும் அச்சம் காரணமாக தான் அதனை மறைத்ததாகவும் சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளதாக முல்லேரிய பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.