பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச அதன் தலைவராக மீண்டும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் செயலாளராக ரஞ்சித் மத்துமபண்டாரவும், கட்சியின் பொருளாளராக கலாநிதி ஹர்ஷ டி சில்வாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளராக திஸ்ஸ அத்தநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.