ஐக்கிய மக்கள் சக்தியினரால் இன்று (20) பிற்பகல் கொழும்பில் நடத்தப்படவுள்ள போராட்டம் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
கோட்டை பொலிஸ் நிலையத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே குறித்த உத்தரவு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் அதன் 7 அமைப்பாளர்கள் மற்றும் அதில் பங்குபற்றுபவர்கள் ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு, காலி முகத்திடல் மற்றும் அது தொடர்பான பல வீதிகளுக்குள் பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரையான காலப்பகுதிக்குள் பிரவேசிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.