ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்று எதிர்வரும் 20ஆம் திகதியுடன் ஒரு வருடம் நிறைவடைகிறது.
அதற்காக எந்தவொரு பதவியேற்பு விழாவையும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதியின் பதவியேற்பு விழாக்களை ஏற்பாடு செய்வது தொடர்பில் பல்வேறு தரப்பினர் முன்வைத்த கோரிக்கைகளை கருத்திற் கொண்டு ஜனாதிபதிக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் திகதியன்று, ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் 134 வாக்குகளைப் பெற்று அடுத்த ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் மறுநாள் ஜூலை மாதம் 21ஆம் திகதியன்று, அவர் நாடாளுமன்றத்தில் எட்டாவது ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
எரிவாயு வரிசைகள், எரிபொருள் வரிசைகள் என நாடு மோசமாக இருந்த போது நாட்டைக் கைப்பற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நிலைமையை முற்றாக மாற்றி நாட்டை வழமைக்கு கொண்டு வந்துள்ளார்.
பதவியேற்பு விழாக்களை நடத்துவதற்கான யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அரசாங்க பணத்தை அல்லது பொது மக்களின் பணத்தை செலவிட்டு விழாக்களை நடத்தக் கூடாது என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்கும் தினத்தில் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளப்படவுள்ளமையும் விசேட அம்சமாகும்