இலங்கைக்கு அடுத்து வரும் எரிவாயு கப்பல்கள் தொடர்பில் நாளைய தினம் (20-06-2022) அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் சில நாட்களில் இலங்கையில் இரண்டு எரிவாயுக் கலன்களை கையகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், வைத்தியசாலைகள், ஹோட்டல்கள், தகனங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய நடவடிக்கைகளுக்காக கப்பலில் இறுதியாக இறக்கப்பட்ட எரிவாயு இன்றைய தினம் (19-06-2022) கையளிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.